இராஜபாளையம், ஏப்.1- இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கேசா ரோடு சேப்டி கிளப் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் வைமா திருப்பதிசெல்வன் தலைமை தாங்கினார். இராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து உரை யாற்றினார். இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வா ளர் ராஜா, விருதுநகர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் சுப்பிர மணியம் கலந்து கொண்டனர். கிளப்பின் தலைவர் சஞ்ஜெய் சக்தி போஸ் வரவேற்றார். கிளப்பின் அறிவுரையாளர் சாந்தினிதேவி நன்றி கூறினார். பள்ளியின் முதல்வர் பொறுப்பாளர் ரமேஷ், முதுநிலை முதல்வர் அருணாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.