tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்க கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு  மனைப் பட்டா வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.3-  மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், பட்டுக்கோட்டை ஒன்றிய 3 ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.  பட்டுக்கோட்டையில், சங்கத்தின் ஒன்றிய மூன்றாவது மாநாடு என்.குமார் தலைமையில் நடைபெற்றது. முகமது அலி சங்கக் கொடியேற்றினார். ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.மணிகண்டன் வேலை அறிக்கை, நித்யா அஞ்சலி தீர்மானம் வாசித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பழ.அன்புமணி துவக்கவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திர பிரகாஷ், கோவி.ராதிகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், ஒன்றியத் தலைவராக எஸ்.மணிகண்டன், செயலாளராக என்.குமார், பொருளாளராக நித்யா உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  ஒன்றிய மாநாட்டில், “வீட்டுமனை, சொந்த வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கு கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றி மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.