tamilnadu

img

மதுரை வாசிக்கின்றது

மதுரை வாசிக்கின்றது

மதுரை, செப்.1- மதுரையில் 20ஆவது புத்தகத் திரு விழா “மதுரை வாசிக்கின்றது” என்ற இயக்கத்தின் மூலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க எழுத்தாணிக்காரத் தெருவில் துவங்கியது. துவக்க நிகழ்வில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசு கையில், “மதுரையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை, மாவட்டம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கா கவே மதுரை வாசிக்கின்றது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும், உலக அளவிலும் கூட இல்லாத ஒரு தனிச்சிறப்பை மதுரை பெற்றுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தும், எழுத்தாளர்களும், புத்தகங்களும் உருவான எழுத் தாணிக்காரத் தெருவில்தான் இன்றைய  புத்தகத் திருவிழா துவங்கு கிறது” என்றார். மேலும், “இந்த தெரு வின் அருகிலேயே அக்கசாலை விநாய கர் கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் நாணயங்கள் தயாரிக்கப் பட்ட இடம் இது. எழுத்தும் நாணய உற்பத்தியும் இணைந்த பாரம்பரி யத்தை தாங்கிய இந்த பகுதியில் புத்த கத் திருவிழா துவங்குவது, மதுரை யின் வரலாற்று பெருமையை உணர்த்து கிறது” என்றும் அவர் கூறினார். 2005 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட நிர்வாகம் தொடங்கிய முதல் புத்தகத் திருவிழாவாகும் இது. இப்போது இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து  வைக்கிறது. செப்டம்பர் 5 முதல் 15 வரை நடைபெறவிருக்கும் இத்திரு விழாவில், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு நாளாவது பங்கேற்று, ஒரு புத்தகமாவது வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் கூறியது போல நண்பர்கள் பிறந்தநாளில் புத்தகங்களை பரிசளிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். “இந்த திருவிழா, மதுரையின் பண்பாட்டுத் திருவிழா ஆகும். அதனை எழுத்தாணிக்காரத் தெருவில் இருந்து துவங்குவது வரலாற்றுச் சிறப்பு  வாய்ந்த தருணம்” என்று அவர் உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சி யில் மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சக்திவேல், மாநக ராட்சி மேயர் வ.இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.