tamilnadu

img

பழைய ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்'

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19 - அரசாணை 100-ன்படி 12.2.2024-இல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் ஓய்வூதியத் திட்ட சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, பொறியாளர் அமைப்பு சார்பில் துறையூர் கோட்ட மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சீனிவாசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி மெட்ரோ செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு துறையூர் கோட்டத் தலைவர் செல்வம் ஆகியோர் பேசினர். இதில் கோட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்னூர் திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் சனிக்கிழமை தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மின்துறை பொறியாளர் அமைப்பு இருதயராஜ், வட்டச் செயலாளர் பழனியாண்டி, வட்ட துணைத் தலைவர் எஸ்.கே. செல்வராஜ், நகரிய கோட்ட செயலாளர் ராதா, தலைவர் ஜான் போஸ்கோ ரவி, கிழக்கு கோட்டத் தலைவர் மணிகண்டன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கிருஷ்ணமூர்த்தி, சிவஞானம், தேவராஜ் ஆகியோர் பேசினர்.  நகர கோட்டச் செயலாளர் ராதா நன்றி கூறினார்.