tamilnadu

img

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர், ஆக.14-  அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், புதன்கிழமை தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அனைத்து சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட கன்வீனர் அகஸ்டின், தொ.மு.ச அமைப்பு செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், யூடியூசி கணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச தொழிற்சங்க பிரிவு தலைவர் கே.கே.குமார், செல்வராஜ் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கருணாநிதி, குணசேகரன், ஆறுமுகம், பெரியசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் செல்லதுரை ஆகியோர் சிறப்புறையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசின் தேச விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, நடவடிக்கைகளுக்கு எதிராக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்களை நிராகரித்து, அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம் செய்வதில் இந்திய இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும். இந்திய - இங்கிலாந்து CETA ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நீலமேகம் நன்றி தெரிவித்தார்.