உழவடை பட்டா கேட்டு மனு
பொன்னமராவதி, ஆக. 7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம், வார்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியை சேந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்காக, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, உழவடை பட்டா கேட்டு சிங்கம்புணரி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் காந்திமதி தலைமையில் சிங்கம்புணரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க பொன்னமராவதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் அந்த பகுதி உழவடை விவசாயிகள் பங்கேற்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்துள்ளதாக சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு உழவடை விவசாயிகளுக்கு தாமதமின்றி உழவடை பட்டா வழங்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய குழு தெரிவித்துள்ளது.