பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 22- பறிக்கப்பட்ட சலுகைகளை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டுமென அகில இந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதி யர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க ஈரோடு கோட்டப் பேரவை ஈரோடு பெரியார் மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஆர்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். புரவலர் பி.நல்லதம்பி முன் னிலை வகித்தார். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எஸ். கருணாநிதி தொடக்கவுரையாற்றினார். செயலர் என்.ராம சாமி வேலை அறிக்கையும், பொருளாளர் வி.கே.பழனி வேல் வரவு செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். பிஎஸ் என்எல் சங்கம் என்.குப்பசாமி மற்றும் ஏஐபிஆர்பிஏ சங்க மாநில துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்க வேண் டும். பென்சன் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை உடனே நியமிக்க வேண்டும். கமுடேசன் தொகை பிடித்தம் காலத்தை 12 ஆண்டுக ளாகக் குறைக்க வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப் படியை உடனே வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட ரயில் கட் டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை கிருஷ் ணமூர்த்தி முன் மொழிந்தார். எஸ்.செல்லமுத்து நன்றி கூறினார். பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதி யர்கள் கலந்து கொண்டனர்.