tamilnadu

img

காலமானார்

காலமானார்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 8-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தகப்பனார் வெள்ளைச்சாமி காலமானார்.  கோமல் கிளைச் செயலாளர் டி. முருகையன் தகப்பனார் தருமையன், வெள்ளைச்சாமி இருவருமே நீண்ட காலமாக கட்சி பணியாற்றியவர்கள். அவர் காலமான செய்தியை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என். முருகானந்தம், சி. ஜோதிபாசு, தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.