பணி நிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்கள் கைது!
சென்னை, ஜூலை 8 - பணி நிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வது; சங்கத் தலைவர்களை தாக்கு வது போன்ற காவல்துறையின் ஒடுக்கு முறை நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “13 ஆண்டு களாக தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வரும் பகுதிநேர ஆசிரி யர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வில்லை. மாதம் 12,500 ரூபாய் என்று குறைந்த ஊதியம் தரப்படுகிறது. மே மாதத்தில் ஊதியம் தரப்படுவதில்லை” என்று குறிப்பிட்டார். திமுக தனது தேர்தல் அறிக்கை 181-இல் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்வதாக கூறியிருந்தது. இந்நிலை யில் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை யில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களை முறையாக அழைத்து பேசி தீர்வு வழங்காமல் காவல்துறைகளை ஏவிவிட்டு தலை வர்களை அடிப்பதும் அடக்கு முறையில் ஈடுபடுவதும் கண்டனத்துக் குரியது” என்று கூறியுள்ளார்.