சேதுபாவாசத்திரம் அருகே பகுதி நேர அங்காடி திறப்பு
தஞ்சாவூர், ஜூலை 15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொள்ளுக்காடு ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி புதிய பகுதி நேர அங்காடியை திறந்து வைத்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் தனபால், கிராம தலைவர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.