திருவண்ணாமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு'
சென்னை,அக்.24- திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிர மித்துள்ளவர்களின் பட்டி யலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளை யும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள கட்டு மானங்களை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. மலைச் சரிவில் ஆக் கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமித் துள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை என புகார் தெரி விக்கப்பட்டது. இதைய டுத்து, ஆக்கிரமிப்பாளர் களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நீதிபதிகள், மலைச் சரிவிலும், நீர் நிலைகளிலும் ஆக்கிரமித் துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.