tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கருத்தரங்கு

தஞ்சாவூர், அக்.15 -  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு’  என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சியை செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணைந்து நடத்தின.  தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை வகித்தார். தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் இ.மாதவன் (பொ) வாழ்த்திப் பேசினார்.  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் துணை  முதல்வர் பேரா.அழகப்பா மோசஸ் துவக்கவுரையாற்றி னார். மதுரை அமெரிக்கன் கல்லூரி பேரா. ராஜேஷ், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இணைப் பேராசிரி யர் முனைவர் ஆனந்த் கருணாகரன், அருங்கானுயிர் காப்பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  முன்னதாக இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கு.க.கவிதா வரவேற்றார். அத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.ராகேஷ் சர்மா நன்றி யுரை ஆற்றினார். இப்பயிற்சி பட்டறையில் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளியில்  500 மரக்கன்றுகள் நடும் விழா  

தஞ்சாவூர், அக்.15 -  தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மாதவன் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர்  மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து குறுங் காடுகள் அமைத்தன.  இதில் ஆசிரியர்களுடன் இணைந்து, மாணவர்கள் 500  மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி, பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க தலைவர் ஆதித்தியன், வட்டாரத் தலை வர் ஆசிரியர் இராமநாதன், சாசன பொருளாளர் சாமி யப்பன், ஆசிரியர் ஜெயகாந்தி, திருச்சி மண்டல ஒருங்கி ணைப்பாளர் மற்றும் ஜேஆர்சி தஞ்சை மாவட்ட அமைப்பாளர்  பிச்சைமணி, பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்ட  தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 தஞ்சாவூர், அக்.15 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்தில் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி நடை பெற்றது. சேதுபாவாசத்திரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட 24 பள்ளிகளில், இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் பணி புரியும் தன்னார்வலர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான  பயிற்சி கடந்த திங்கள்கிழமை வட்டார வள மையத் தில் நடைபெற்றது. பயிற்சியில் அரும்பு, மொட்டு, மலர், வகுப்பு நிலை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்கள் கற்பிக்கப் பட்டன. மாணவர்களுக்கு முன்னறித் தேர்வு வைத்து, மாணவர்களின் நிலை அறிந்து கற்பித்தலில் ஈடுபட பயிற்சி  அளிக்கப்பட்டது. கற்றல் விளைவுகள், கற்பித்தல் நேரம்,  பயிற்சி நேரம், செயல்பாடு, பாடநூல் செயல்பாடு மற்றும்  மதிப்பீடு ஆகியவை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர் அ.ரா. சரவணன் செயல்பட்டார். ஏற்பாடுகளை வட்டார வள  மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் செய்திருந்தார்.

மதுவிலக்கு விழிப்புணர்வு போட்டிகள்: அரசு கல்லூரியில் பரிசளிப்பு விழா

அறந்தாங்கி, அக்.15 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பேச்சு,  கட்டுரை,  ஓவியம் மற்றும் நாடகப் போட்டிகள் நடை பெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாண வியருக்கான பரிசளிப்பு விழா  நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமையேற்று, மாணவ, மாணவியருக்குப் பரிசு களை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.  போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றிய, இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.டேவிட் கலை மணிராஜ், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி.மேனகா, முனைவர் ச.கணேஷ் குமார், முனைவர் க.செல்வி, முனைவர் தெ.தேன்மொழி, ரா.ராஜலட்சுமி, வேதியியல் துறைத் தலைவர் து. சிற்றரசு, கல்லூரி நூலகர்  ம.பொற்கொடி உள்ளிட்டோர் பரிசு பெற்ற மாண வர்களை வாழ்த்தினர்.

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

 பாபநாசம், அக்.15 - விஞ்ஞானியும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் பிறந்த நாள் புதனன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அவரது  படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு உணவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில்  தலைவர் முருகவேலு, செயலர் முஹமது அப்துல் காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.