tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதிய உயர்வில் கை வைக்கும் அதிகாரிகள்

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதிய உயர்வில் கை வைக்கும் அதிகாரிகள்

சென்னை, ஆக. 5 - தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை யும் பறிக்கும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து செவ்வாயன்று (ஆக.5) சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவித்த 2000 ரூபாய் மாத ஊதிய உயர்வை பாகு பாடின்றி வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழி யர்களின் பணி நிரந்தரம் குறித்து தமிழ்நாடு அரசின்  மேல்முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, 480 நாட்கள் பணி  முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடை பெற்றது. சம்மேளனத் தலைவர் பி.முருகன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தை சிபிஎம் சட்ட மன்றக் குழுத் தலைவர் நாகை மாலி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ. 2  ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் அறிவித்தார். ஆனால், சில  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வில் ஆயிரம் ரூபாய் குறைத்து வழங்கப்படுகிறது. அதிகாரி களின் இந்த நடவடிக்கை சட்டமன்ற அறிவிப்புக்கு  எதிராக உள்ளது. இதில் துறையின் அமைச்சர் தலையிட வேண்டும்” என்றார். நீதிமன்ற அவமதிப்பு “உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் அரசு, ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது உத்தரவை மீறுவதாகும். எனவே முதலமைச்சர், அமைச்சர் இருவரும் தலையிட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை குற்றவாளியாக்கும் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும். ஊழி யர்கள் மன உளைச்சலின்றி பணியாற்றும் சூழலை  உருவாக்க வேண்டும்” என்றும் நாகைமாலி வலி யுறுத்தினார். கே.திருச்செல்வன் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல் வன் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் ஆய்வு  நடத்தும் அதிகாரிகள், ஊழியர்களிடம் முறையாக  விசாரிக்காமல் இடமாற்றம், தற்காலிக நீக்கம்,  ஜிஎஸ்டியுடன் அபராதம் வசூலிப்பு, பிழைப்பூதி யம் மறுப்பு என்று தண்டனைகளை வழங்குகின்ற னர். இந்த தண்டனை போதாது என்று ஊதிய  உயர்வில் ஆயிரம் ரூபாயை வழங்க மறுக்கின்ற னர். ஒரு குற்றச்சாட்டுக்கு 4 தண்டனை அளிப்பது  இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும் அவர் கூறி னார். “காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறு வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு  செய்ய, நீதிமன்ற உத்தரவுப்படி மேலாண் இயக்கு நர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மதுபானம் விற்க இலக்கு நிர்ணயிப்பதை கைவிட  வேண்டும்” என்றார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நுகர்பொ ருள் வாணிபக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்  செயலாளர் பி.புவனேஸ்வரன், கூட்டுறவு ஊழியர்  சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தை ஆதரித்து பேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் துணைத்  தலைவர் தெ.வாசுகி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.