நாச்சியார்கோவிலில் புதிய காவல் நிலையம் திறப்பு
கும்பகோணம், செப். 24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் காவல்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் காத்திருப்பறை, ஓய்வு அறை, மாற்றுத்திறனாளிகள் அறை, ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை என 5,475 சதுர அடியில் ரூ.2 கோடியே 69 லட்சம் முதலமைச்சர் நிதியிலிருந்து, தஞ்சை மாவட்டத்தில் பெரிய காவல் நிலையமாக உள்ள நாச்சியார் கோவில் காவல் நிலையத்தை, திங்களன்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன், குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜி, காவல்துறை ஆய்வாளர்கள் ராஜேஷ், துர்கா திமுக ஒன்றியச் செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.