வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
சென்னை, செப். 22- செப்டம்பர் 25 அன்று மத்தியகிழக்கு மற்றும் அத னை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உரு வாகக்கூடும். இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா – வட க்கு ஆந்திர கடலோரப்பகு திகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை 83 ஆயிரத்தைத் தாண்டியது!
சென்னை, செப். 22 - ஆபரணத் தங்கத்தின் விலை, திங்கட்கிழமை யன்று ஒரே நாளில் பவு னுக்கு ரூ. 1,120 உயர்ந்துள் ளது. கடந்த செப்டம்பர் 16 அன்று பவுன் ரூ. 82 ஆயி ரத்தை தாண்டிய தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப். 22) அன்று காலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 82,880 ஆகவும், பிற்பக லில் மீண்டும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ. 83,440 ஆகவும் உயர்ந்தது. இதன்மூலம், தங்கத்தின் விலை ஒரேநாளில் 1,120 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
துரைமுருகன் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் தடை!
புதுதில்லி, செப். 22 - தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்த குமாரி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வழக்கு வேலூரில் இருந்து சென்னையில் உள்ள 10- ஆவது ஊழல் தடுப்பு கூடு தல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், அமைச்சர் துரை முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக் கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்ற த்தின் விசாரணைக்குத் தடைவிதித்துள்ளது.