tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

சாட் ஜிபிடி-யில் கற்றல் திறனை வளர்க்க புதிய அம்சம்!

ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு சொந்தமான ChatGPT-இல் “Study Mode” எனப்படும் கற்றல் திறனை வளர்க்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், பதிலுக்கு பதில் கேள்விகளை முன்வைத்து, அவர்களின் கற்கும் திறனை வளர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தகவல்களை மாணவர்களின் மனதில் பதிய வைப்பதே இந்த அம்சத்தின் குறிக்கோள் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த அம்சம் தற்போது ChatGPT Free, Plus, Pro மற்றும் Team திட்டங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. Edu plan கொண்ட பயனர்களுக்கு, இந்த அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மெட்டாவின் எடிட்ஸ் செயலியில்  புதிய அம்சங்கள் அறிமுகம்!

மெட்டாவின் எடிட்ஸ் (Edits) செயலியில் ஆடியோ எக்ஸ்டென்ஷன்ஸ் (Audio Extensions), ரியல் டைம் ப்ரிவியூவ் (Real time Preview) உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் வீடியோ எடிட்டிங் செயலியான எடிட்ஸ்-இல் ஆடியோ எக்ஸ்டென்ஷ ன்ஸ் ஆன ஆடியோவில் அமைதியாக பகுதிகளை வெட்டும் silence-cutting tool, வீடியோவின் நேரத்தை கூட்டும் வகையில் ஆடியோவின் நேரத்தை அதிகரிக்கும் (Extended audio duration), ஆடியோ-வை மொபைலில் இருந்து import செய்வது ஆகிய அம்சங்களும், வீடியோவில் புதிய transition மற்றும் Effect-களை உள்ளிடும் ரியல் டைம் ப்ரிவியூவ் (Real time Preview) அம்சமும், புதிய 150 எழுத்து வடிவங்கள் (Fonts), முழுவதுமாக எடிட் செய்யப்படாத வீடியோவை இன்ஸ்டாகிராம் டிராஃப்டில் சேமிக்கும் அம்சம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயோவில் மியூசிக்கை சேர்ப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் பயோவில் (Instagram Bio) பொதுவாக நம்மை பற்றிய சுருக்கமான தகவல்கள் உதாரணமாக நாம் செய்யும் தொழில், ஆர்வங்கள் மற்றும் வேடிக்கையான விஷயங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறோம். பயோவில், இணையதள லிங்க் (Website Link), எமோஜிகள் (Emojis) மற்றும் ஹேஷ்டேக்குகள் (Hashtags), மியூசிக் (Music) ஆகிய தகவல்களும் சேர்க்க முடியும். இன்ஸ்டாகிராம் பயோவில் மியூசிக்கை சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்: * முதலில் இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து உங்கள் கணக்கில் உள்ள Profile படத்தை கிளிக் செய்யவும். * அதில் Edit Profile என்பதை கிளிக் செய்து “Add music to your Profile” என்பதை தேர்ந்தெடுக்கவும். * அதன் பிறகு மியூசிக்கை Search Music என்ற டேப்பில் உங்களுக்கு விருப்பமான பாடலை தேர்வு செய்து, அதில் 30 விநாடிகள் மட்டும் தேர்வு செய்து “Done” என்பதை கிளிக் செய்யவும். அதேபோல், உங்கள் பயோவில் இருந்து மியூசிக்கை நீக்க விரும்பினால், உங்கள் பயோவில் உள்ள மியூசிக்கை கிளிக் செய்து, “Remove profile song” என்பதை தேர்வு செய்வதன் மூலம் அதை நீக்கலாம். வேறு மியூசிக்கை மாற்ற “Change Profile Song” என்பதை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான பாடலை மாற்றிக்கொள்ளலாம்.