tamilnadu

img

கூகுள் ப்ளே ப்ரொடெக்டில் புதிய அம்சம்!

கூகுள் ப்ளே ப்ரொடெக்டில் புதிய அம்சம்!

கூகுள் ப்ளே ப்ரொ டெக்டில் (Google Play  Protect), ஆண்ட்ராய்டு கருவி களில் தீங்கிழைக்கும் செயலி களை கண்டறிந்து, பாதுகாப்பை  வழங்கக்கூடிய புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை கூகுள் நிறு வனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கூகுள் ப்ளே ப்ரொடெக் டில் 5 புதிய அம்சங்கள் வழங்கப் பட்டுள்ளன.  1) ப்ளே ப்ரொடெக்ட், இப்போது தானாகவே தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகளுக்கான அனுமதிகளை ரத்து  செய்கிறது. இதனால் ஸ்மார்ட்போன்களின் ஸ்டோரேஜ் (Storage), புகைப்படங்கள் மற்றும் கேமரா போன்ற முக்கியமான தரவுகளை, தீங்கிழைக்கும் செயலிகள் அணுகுவது கட்டுப்படுத்தப்படுகிறது. பயனர்கள் இந்த அனுமதிகளை manual ஆக மாற்றிக் கொள்ளலாம். மேம்பட்ட பாதுகாப்பிற்காக ஒரு ‘உறுதிப்படுத்தும் நிலை’  சேர்க்கப்பட்டுள்ளது. 2) பயனர்களின் போனில், அழைப்புகள் மூலம்  தீங்கிழைக்கும் பொருட்களை செலுத்தும் மோசடியா ளர்கள், முதலில் ப்ளே ப்ரொடெக்டை disable செய் கின்றனர். இதை எதிர்கொள்ள, மூன்றாம் தரப்பு அழைப்பு செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்பு கள், தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளின் போது Play Protect ஆப் ஸ்கேனிங் நிலைமாற்றம் (Toggle) செய்யப்படுவது தற்காலிகமாக முடக்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 3) கூகுள் ப்ளே ப்ரொ டெக்டில், Enhanced fraud protection pilot என்ற அம்சம் இந்தியா, பிரேசில், ஹாங்காங், கென்யா, நைஜீ ரியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது. இந்த அம்சம், சிங்கப்பூர் சைபர் செக்யூரிட்டி  ஏஜென்சியுடன் (CSA) இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது நிதி மோசடிகளை மேற்கொள்ள உதவும் செயலிகளை  கண்டறிந்து, அது இன்ஸ்டால் செய்யப்படுவதை தடுக் கின்றது. 4) ஒருவேளை ப்ளே ப்ரொடெக்ட் உங்கள் போனில் முடக்கப்பட்டிருந்தால், குரோம் ப்ரவுசர் அதை மீண்டும் இயக்கும்படி பயனர்களுக்கு அறிவிக்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 5) கூடுதலாக, பயனரின் தனியுரிமை மற்றும் பாது காப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், VPN ஆப்களுக்கு “Verified” பேட்ச் ஒன்றை கூகுள் அறிமுகப் படுத்தி உள்ளது.

ஐபோன் பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!

ஐபோன் பயனர்கள், இனி விண்டோஸ் 11 இயங்குதள கணினியின் ஸ்டார்ட் மெனுவில் (Start Menu) இருந்து போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அணுகலாம் என்று  மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் போன் லிங்க் (Phone Link) அம்சம் மூலம், விண்டோஸ் 11 கணினியின் ஸ்டார்ட் மெனுவுடன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ஒருங்கிணைக்கும் வசதி  ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது, ஐபோன் பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தற்போது  விண்டோஸ் இன்சைடர்ஸ் (Windows Insiders) மென்பொருள்  பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்பட உள்ளது.  விண்டோஸ் 11 கணினியின் ஸ்டார்ட் மெனுவுடன் ஐபோன் ஒருங்கிணைப்பதன் மூலம், போனின் பேட்டரி நிலை (Phone’s  battery status), இணைப்புகளை (Connectivity) பார்க்க வும், போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அணுகவும்  முடியும். மேலும், இதில் உள்ள Recent Tab ஆப்ஷனில், போனுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களும் (Notifications) பார்க்க முடியும். விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவுடன்  ஐபோன் ஒருங்கிணைப்பது எப்படி? ஐபோனுடன், ஸ்டார்ட் மெனு ஒருங்கிணைப்பை இயக்க முதலில் விண்டோசில், போன் லிங்க் செயலியும், ஐஓஎஸ்-இல் லிங்க் டு விண்டோஸ் (Link to windows) செயலியும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். * ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்து, அதின் வலது பக்க பேன லில் device connection ஆப்ஷனை கண்டறிய வேண்டும். * இதை அடுத்து, உங்கள் சாதன வகையை Android அல்லது iPhone என தேர்வு செய்யவும். * உங்கள் தொலைபேசிக்கும் கணினிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.  இதன் மூலம் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் (Start Menu)  இருந்து உங்கள் போனின் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அணுகலாம்.