திருநெல்வேலி, மே 19- கல்லீரலில் உருவான கற்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் அகற்றி சாதனை செய்துள்ளனர். இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையைச் சேர்ந்தவர் சும்சுதீன் (42). இவர் இரண்டு மாதங்களாக வயிற்று வலி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் உடல் அரிப்பு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடல் இரைப்பை அறு வைச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எம்ஆர்ஐ பரிசோதனை செய்ததில், அவருக்கு கல்லீரலில் உள்ள பித்தநீர் பாதையில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந் தது. இந்த சிகிச்சைக்காக கடந்த மே 14 அன்று அனுமதிக்கப் பட்டு, குடல் அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறை மருத்துவக் குழுவினர் நவீன உள்நோக்கி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை மூலம் கற்கள் அனைத்தையும் அகற்றினர். தற்போது நோயாளி குணமடைந்து வருகிறார். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், தமிழக அரசு முத லமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை இல வசமாக செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அதிநவீன சிகிச்சை முறைகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் தென் தமிழகத்தின் 5 மாவட் டங்களில் உள்ள ஏழை-எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.