tamilnadu

அமைதியை சீர்குலைக்கும் இலங்கை கடற்படை: முத்தரசன்-வைகோ கண்டனம்

சென்னை,டிச.20- அமைதியை சீர்குலைக்கும் இலங்கை கடற்படைக்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளி லிருந்து 18.12.2021ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 55 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களிடமிருந்து 8  மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை அரசின் கடற்கடை தொடர்ந்து அத்துமீறி செயல் பட்டு தமிழ்நாட்டின் மீனவர் வாழ்வுரி மையை பறித்து வருவது இந்தியா வின் குறிப்பாக தமிழ்நாட்டின் அமைதி நிலைக்கு பெரும் குந்தகம் ஏற்படுத்து கிறது. இலங்கை கடற்படையின் அத்து மீறலை வன்மையாகக் கண்டிக் கிறோம்.

இது குறித்து ஒன்றிய அரசின் வெளி யுறவுத்துறை உறுதியான நடவடிக்கை எடுத்து - இலங்கை கடற்படையின் அத்துமீறலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களை கைது  செய்யும்போது படகுகளை பறிமுதல்  செய்வதுடன், அதனை உடைத்தும்,  மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து சேதப்படுத்துவதுமான அட்டூழியங்க ளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இலங்கை அரசின் எல்லை மீறிய செயலைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முழுமையான ஆதர வைத் தெரிவித்துக் கொள்கிறது. மீனவர்களின் உணர்வை பிரதி பலித்து தமிழ்நாடு முதலமைச்சர், அயலு றவுத்துறை அமைச்சருடன் பேசி யிருப்பது நிலவரத்தின் தீவிரத்தை காட்டுகிறது. ஒன்றிய அரசு உறுதி யான நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமை காக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “1980 களில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத் திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர் களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது. ஆனாலும், ஒன்றிய அரசு நமது மீனவர்கள் பாதுகாக்க நட வடிக்கை எடுக்கவில்லை”என்று பாஜக அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

;