tamilnadu

img

தமிழக அரசின் அறிக்கை அடிப்படையில் விசாரணை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் உறுதி

தமிழக அரசின் அறிக்கை அடிப்படையில் விசாரணை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் உறுதி

கரூர், அக்.4- கரூர் துயரச் சம்பவத்தில் தமிழக  அரசு வழங்கும் அறிக்கையின் அடிப் படையில் விசாரணை தொடரும் என்று பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார். கரூர் மாவட்டம், வேலுச்சாமி புரத்தில் செப்.27 ஆம் தேதி நடந்த  தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்பு ரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் 13 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிக மானோர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற் கொள்ள பட்டியல் சமூகத்தினருக் கான தேசிய ஆணையத்தின் தலை வர் கிஷோர் மக்வானா தலைமையி லான குழுவினர் கரூர் வந்தடைந்த னர்.  அதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்து கேட்ட றிந்தனர். பின்னர் பட்டியலின மக்கள்  அதிகளவில் உயிரிழந்த ஏமூர் புதூர்  கிராமத்திற்கு சென்ற குழு, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் விசா ரணை நடத்தியது. அப்போது பெண் ஒருவர் கதறி அழுத நிலையில், அவ ருக்கு ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா ஆறுதல் தெரி வித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.27 ஆம் தேதி கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிச லில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும்  எனது சார்பாகவும், பட்டியல் சமூகத் தினருக்கான தேசிய ஆணையத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டி யல் சமூகத்தினருக்கான தேசிய  ஆணையத்தின் தலைவராக இருப்ப தால்தான், என்னால் உயிரிழந்த வர்களின் குடும்பங்களைச் சந்தித்து,  அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ள முடிந்தது” என்றார். மேலும், “கரூரில் நடந்த சம்ப வம் பெரும் வேதனையை அளிக் கிறது. நாம் கொஞ்சம் விழிப்புணர்வு டன் இருந்திருந்தால், உயிரி ழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரணை செய்து, மீண்டும் இது போன்ற ஒரு துயரச்  சம்பவம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என தெரி வித்தார். “கரூர் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என ஆணையம்  தரப்பில் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள், அவர் களுக்கு கட்டாயம் ஏதாவது செய்ய  வேண்டும். தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான முழு அறிக் கையை தமிழக அரசிடம் கேட்டுள் ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தொடர்வோம்” என்று கிஷோர் மக்வானா தெரிவித்தார்.