நாகர்கோவில் மாநகராட்சி 4 ஆவது மற்றும் 18 ஆவது வார்டுக்குட்பட்ட பள்ள விளை சானல் கரை பகுதியில் ரூ.9.50 லட்சம் செலவில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியினை மேயர் ரெ.மகேஷ் துவங்கி வைத்தார். துணைமேயர் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினர் அமல செல்வன், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், பகுதி செயலாளர் சேக் மீரான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
