ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு கவுரவம்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேவா ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மரியாதை வழங்கப்பட்டுள்ளது. திரை உலகில், ‘தேனிசைத் தென்றல்’ என்று வர்ணிக்கப்படும் தேவா, 36 ஆண்டுகால இசை வாழ்க்கை யில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் இசை யமைத்த பெருமைக்கு சொந்தக்காரர். அவர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பய ணம் சென்றிருந்த நிலையில், அவரை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து செங்கோலும் அளித்து கவுரவப்படுத்தியுள்ளனர். இது ஒரு பெரிய அரசியல் கவுரவமாகக் கருதப்படு கிறது. இந்த அரிய மரியாதை குறித்து தேவா அவர்கள் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.