குழந்தைகள் நல ஆணைய தலைவருடன் மாதர் சங்கத் தலைவர்கள் சந்திப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாவிடம் செவ்வாயன்று (ஜூலை 22) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி மனு அளித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் வ.பிரமிளா, குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் மருத்துவர் உஷா நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.