tamilnadu

சென்னையில் இன்று திருக்கோயில் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்கிறார்

சென்னையில் இன்று திருக்கோயில்  தொழிலாளர் சங்க மாநில மாநாடு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்கிறார்

சென்னை, அக். 10 - திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு இன்று (அக்.11) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு திருக்கோயில் தொழி லாளர்கள் சங்கம் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அணுகுமுறையால் பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளது. திமுக தலைமையிலான தற்போதைய தமிழக அரசும், அரசு ஊழியர்களுக்கு இணையாக கோயில் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.இரமேஷ்குமார் தலைமையில் நடை பெறும் இந்த மாநாட்டில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சீனி வாசன், சங்கத்தின் தலைவர் ஜெ.குமார் உள்ளிட்டோர் பேசுகின்றனர். மாநாட்டில் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளையும் சங்க நிர்வாகிகள் முன் வைக்க உள்ளனர்.