பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுதில்லி, ஜூலை 23- மௌலானா ஆசாத் தேசிய (ஃபெல்லோஷிப்) திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து ள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வியாழன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது மக்களவையில் பி.ஆர்.நடராஜன், மௌலானா ஆசாத் தேசிய (ஃபெல்லோஷிப்) திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்றும் அதில் நிதி உதவி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்றும் கேட்டிருந்தார்.
அதற்கு ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துமூலம் பதிலளிக்கை யில் கூறியதாவது: 2022 செப்டம்பர் வரை மௌலானா ஆசாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டம், பல்கலைக் கழக மானியக் குழு மூலமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனம், மௌலானா ஆசாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டத்தினை செயல்படுத்தும் ஏஜன்சியாக நியமிக்கப்பட்டது. அதன் செயல்பாட்டு பிரச்சனைகளே ஃபெல்லோஷிப் உதவி அளிப்பதில் தாமதத்திற்குக் காரணமாகும். காலாண்டு அடிப் படையில் ஃபெல்லோஷிப் உதவிகள் அளிக்கப்படுகின்றன. பல்கலைக் கழக மானியக்குழு, அறிவியல்தொழிலக ஆய்வு மன்றம் ஆகியவற்றின் இளநிலை ஆய்வு ஃபெல்லோ ஷிப்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமூகங்கள் மற்றும் சமூகப் பிரிவு மாணவர்களுக்குமானாது. மேலும் சிறுபான்மையினர் சமூகத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் தேசிய ஃபெல்லோஷிப் திட்டங்களும் பழங்குடியினருக்கான தேசிய ஃபெல்லோஷிப் திட்டங்களும் பொருந்தும். மேற்கூறிய திட்டங்களுக்கிடையே ஒன்றுக்கொன்று சிக்கலாக இருப்ப தையும் தவறாகப்பயன்படுத்த வாய்ப்பு இருப்பதையும் கருதி 2022-23ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் நிறுத்தப் பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே நிதிஉதவி பெற்றவர்கள் அவர்கள் உதவி பெறும் காலம் வரை தொடர்ந்து நிதியைப் பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி)