tamilnadu

img

போக்சோ குற்றவாளி பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு

திண்டுக்கல், டிச.6- திண்டுக்கல்லில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  தனியார்  நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுரு கனுக்கு மகிளா நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பாக திங்க ளன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவி களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் அக்கல்லூரி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று 2 நாட்களாக இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குற்ற வாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை ஒரு வார காலத்திற்குள் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. போக்சோ சட்டத்தின்படி சில பிரிவுகளில்  பிணை வழங்க முடியும் என்று இருந்தா லும் கூட குற்றவாளி மாணவிகளின் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் பல விருதுகளை பெற்றிருக் கிறார் என்றும், இவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. இவர் நல்லவர் என்றும் கூறி பிணை வழங்கும் போக்கு கவலையளிப்பதாக உள்ளது.  செய்த குற்றம் தொடர்பாக வழக்கில் நீதி வழங்க  வேண்டுமே தவிர விருதுகளைக் கொண்டு ஜாமீன் வழங்கக்கூடாது.  தாளாளர் ஜோதி முருகனுக்கு பிணை வழங்கியது தமிழ்நாடு முழு வதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நீதிமன்றத்தின் மீது ஒரு நம்பிக்கையின்மையையும், அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. 

எனவே, நீதிமன்றம் தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களுடைய மன வேதனையை வெளிப்படுத்தி வருகிறோம்.  வடமதுரை அருகே ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையின் மூக்கில் மின்சாரத்தைச் செலுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரி விக்கிறது.  அந்த போக்சோ குற்றவாளி எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி இதே மகிளா நீதிமன்றம் விடுவித்தது. அப்படி என்றால் இந்த கொலையை யார்  செய்தது என்று கேள்வி எழுப்ப வேண்டிய நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்தது.  இந்த வழக்கில் தாளாளர் ஜோதி முருகனின் கல்லூரியில் உள்ள மாணவி கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று இரண்டு நாட்களாக போராடி னார்கள். இரவு பகலாக காவல்துறை அதிகாரிகளும் உடனிருந்தார்கள். குற்றவாளி பிடிக்கப்பட்டார். 

ஒரு சிறு தவறு செய்தவர்களாக இருந்தால் கூட அவர்கள் யாருக்கும் பிணை வழங்க மாட்டார்கள். அப்படி இருக்க 2 போக்சோ வழக்கு பதியப்பட்ட தாளாளர் ஜோதிமுருகனுக்கு அவசர அவசரமாக பிணை வழங்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இது  நீதிமன்றத்தின் மீது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தாது.  எனவே, மகிளா நீதிமன்றம் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணை யை ரத்து செய்ய முன்வர வேண்டும் . இவ்வாறு கே.பாலபாரதி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.ஜானகி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.ராணி, மாவட்டப்  பொருளாளர் கவிதா, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வனஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

;