tamilnadu

img

பாலியல் தொல்லை கொடுத்தவரை காப்பாற்றுவதா மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாலியல் தொல்லை கொடுத்தவரை காப்பாற்றுவதா? மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.21- அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை காப்பாற்றும் காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசுப்பள்ளியில் 13 வயது மாணவி களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை  கொடுத்து வந்தார். இதுகுறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர், பஞ்சாயத்து செய்ய கால அவகாசம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு மேலான நிலையிலும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம், கல்வித் துறை, காவல்துறை மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு, கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜுனன் தலைமை வகித்தார்.  இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, பி.பி.பழனிசாமி, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.பவித்ராதேவி, வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வ நாதன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.