மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜக ஆட்சி பொறுப்பிலிருந்து விலக வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 22) பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் பி.ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் ஒய்.இஸ்மாயில், சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் (சிபிஎம்), மாவை.மகேந்திரன் (மதிமுக), தேவ அருள்பிரகாசம் (விசிக), சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தீ.சந்துரு (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஜி.விஜயலட்சுமி எம்.சி, உள்ளிட்டோர் பேசினர்.