tamilnadu

img

கோவை குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்தவர், 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கோவை குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்தவர், 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கோவை, ஜூலை 10- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா என்பவரை, வரும் ஜூலை 24  ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58  பேர் உயிரிழந்தனர். சுமார் 150 -க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவை குண்டு  வெடிப்பு வழக்கில், 18 ஆவது குற்றவாளி யாக சேர்க்கப்பட்ட கோவை உக்கடம் பகுதி யைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவரை கர்நாடக மாநிலத்தில் கோவை போலீசார் புத னன்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே 3  கொலை வழக்கில் போலீசாரால் கைது செய் யப்பட்டதும், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு  பின் தலைமறைவானதும், ராஜா  தனது பெயர் அடையாளங்களை மாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவை கோவை அழைத்து வந்த போலீ சார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோவை 5 ஆவது குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர்.  வழக்கை விசாரித்த நீதியரசர் வெர்ஜின்  வெஸ்டா, டெய்லர் ராஜாவை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோவை மத் திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கே.தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வியாழனன்று, 300 அடி தூரத்திற்கு அடர் மஞ்சள் நிறத்தில் கோடிட்டு புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.