tamilnadu

img

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கூண்டில் ஏற்றுவோம்: முதல்வர்

சென்னை, அக்.19- “ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம்தான் தூத்துக்குடிச் சம்பவம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (அக்.19) முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அதை யாரும் மறுக்கவோ, மறை க்கவோ முடியாது. துயரமும், கொடூரமுமான அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்குச் சென்றேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சியானது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டு இருக் கிறது.  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி  வழியில்  மிகத்தொடர்ச்சி யாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 22.5.2018 அன்று மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவே இந்த ஊர் வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை யை அன்றைய அதிமுக அரசு சரியாகக் கையாள வில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்து களைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை. விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம்.  பசுமை வளாகம் அமைக்க மறுத்தது, தாமிரத் தாது கொண்டு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளை மறுத்தது, நச்சுக்  கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் மண்ணை யும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தும் விதத் தில் கொட்டியது. தங்களது நிறுவன கழிவு நீரை  பொது ஓடையில் கலக்கச் செய்தது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் சார்பிலும் பல முறை அதி காரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படா ததே இந்த போராட்டம் நடைபெறுவதற்கான கார ணமாக அமைந்தது.  எனவே முறையான நடவடிக்கைகள் எடுக்  காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி கள், மாவட்ட நிர்வாகத்தின் மீது உரிய துறைவாரி யான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உள்ளூர் மக்களுக்கு வேலை

14 உயிர்கள் கொல்லப்படுவதற்கும், சட்டம்- ஒழுங்கு குலைவதற்கும் முதலீட்டுச் சூழல்  பாதிக்கப்படுவதற்கும் தமிழ்நாட்டின் பெருமை  குலைவதற்கும் இட்டுச் சென்ற மிக மோசமான சம்பவம் இது என்பதால் ஆரம்பம் தொட்டு  அதன் காரணங்கள் ஆராயப்பட்டு, நடவடிக்கை கள் மேற்கொள்வதுடன் எதிர்காலத்தின் இப்ப டிப்பட்ட நிலைமை ஏற்படாமலிருக்க உரிய வழி முறைகளை தமிழ்நாடு அரசாங்கம் உருவாக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில், ஒரு தொழில் நிறுவனம் உருவாக்கப்படுகிறபோது, அந்த மாவட்ட மக்கள் நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை அளிக்கி றார்கள். அதுமட்டுமின்றி எவ்வளவு பாதுகாப் பான தொழிலாக இருந்தாலும் மாசுபடுதல் தவிர்க்  கவே முடியாதது. அதையும் அந்த பகுதி மக் களே ஏற்றுக்கொள்கிறார்கள்.  ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அன்றாடப் பணி களுக்கும், ஒப்பந்தப் பணிகளுக்கும் வெளி மாநி லத்தவரை பயன்படுத்தியதும் உள்ளூர் மக்க ளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையும் கணக்கிலெடுத்து தொழிற்சாலை உருவாக்கப் பட்டால் அதில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உத்தரவாதப்படுத்த உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.