tamilnadu

img

மதுரை அரசு மருத்துவமனையில் ‘எலும்பு வங்கி’ துவக்கம்

மதுரை, டிச.22- எலும்பு புற்றுநோய் உள்ளிட்ட  பல்வேறு எலும்பு நோயால் பாதிக்கப் படும் ஏழை நோயாளிகளும் எலும்பு  மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மறுவாழ்வு பெறுவதற் காக மதுரை அரசு மருத்துவமனையில் ‘எலும்பு வங்கி’யும் விரைவில் தொடங்கப்படும் என கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற் கான திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  அந்தத் தருணத்தில், எலும்பு புற்று நோயால் இறப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதி கரித்துள்ளது. மதுரை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஏழு லட்சமாக இருந்த உள் நோயாளி கள் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்து 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு தின மும் 30 புதிய புற்றுநோயாளிகளும், 70 பழைய புற்றுநோயாளிகளும் சிகிச்சைப்பெறுகின்றனர். இதில், எலும்பு புற்றுநோயாளிகள் அதிகம்  வருகின்றனர் எனத் தெரிவிக்கப் பட்டது.

ட்டது. இந்த நிலையில் தென் தமிழ கத்தில் முதல் முறையாக மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எலும்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, விபத்து காயம் ஆகிய அம்சங்களில் எலும்பு வங்கியின் பயன்பாடுகள் உதவியாக அமையும். எலும்புப் புற்றுநோயை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்தப்பட வேண்டும். இல்லா விட்டால் நோயாளிகள் இயல்பாக நடக்க முடியாதநிலை ஏற்படும். எலும்பு புற்றுநோய்க்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ‘எலும்பு வங்கி’ அவசியம். 1988 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. 

தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே  எலும்பு வங்கி இருந்தது. தற்போது  மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையிலும் ‘எலும்பு வங்கி’  தொடங்கப்பட்டுள்ளது. எலும்பு புற்றுநோய் காரண மாகவும், விபத்தால் எலும்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இதுவரை, மதுரை அரசு மருத்துவ மனையில் ஸ்டீல் கொண்டு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  தனியார் மருத்துவமனைகளில் பொதுவாக எலும்புகளின் இடை வெளியை நிரப்ப ஐந்து கிராம் எலும்பை  வாங்க ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. ஆனால் இதே எலும்பு  இனி மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் இலவசமாகக் தேவைப் படும் நோயாளிகளுக்கு பொருத்தப் படும். எலும்புகள் மட்டுமல்ல தசை நார்களும் பாதுகாக்கப்படுகிறது என்கிறார் மதுரை அரசு மருத்துவ மனை முதன்மையர் ரெத்தினவேலு. மேலும் அவர் கூறுகையில், மூளைச்சாவு அடையும் நோயாளிகள்,  மற்ற நோயாளிகளிடம் உள்ள எலும்பு கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருந்தது. இனி அந்த எலும்புகளை ஐந்தாண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரையில் செவ்வாயன்று எலும்பு வங்கியை தொடங்கி வைத்த  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், செய்தியாளர் களிடம் கூறியதாவது:-  இறந்தவர்களிடம் இருந்து 14 மணி நேரத்துக்குள் எலும்புகளை அகற்றி பதப்படுத்தி பத்திரப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எலும்புகளை ஐந்தாண்டுகள் வரை சேமித்து வைக்க முடியும். மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு செயற்கைக் கால்கள் வேண்டும் என்றால் பெங்களூரு, கோயம்புத்தூர் செல்ல வேண்டி வரும். ஆனால் இன்றைக்கு மதுரையில் செயற்கைக் கால்கள் தயாரிப்பதற்கான பிரத்யேக பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக மூன்று பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையம் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.இராதா கிருஷ்ணன், இந்திய மருத்துவம் - ஓமியோபதிதுறை இயக்குநர் மரு.கணேசன், மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ்சேகர், சட்டமன்ற உறுப்பினர் கள்  சு.வெங்கடேசன் , மு.பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

;