tamilnadu

img

குவைத்தில் பலியான 45 தொழிலாளர் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

கொச்சி, ஜூன் 14 - குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இந்தியத் தொழிலாளர்கள் 45 பேர் உயிரிழந்த நிலையில், அவர் களின் உடல்கள், இந்தியா கொண்டு வரப்பட்டன. 45 தொழிலாளர்களின் உடல்களு டன் ‘சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்’ என்ற இந்திய விமானப் படை விமானம் வெள்ளிக்கிழமையன்று காலை கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. 12 மாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த தொழிலாளர்களில் 23 பேர் கேரளத்தையும், 7 பேர் தமிழ கத்தையும், 3 பேர் ஆந்திர மாநி லத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய வர்கள் பீகார், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திராவைச் சேர்ந்த  34 பேரின் உடல்கள் நேரடியாக ஆம்பு லன்ஸ் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  எஞ்சிய தொழிலாளர்களின் உடல்கள் தில்லி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முதல்வர் பினராயி விஜயன் - அமைச்சர்கள் அஞ்சலி

முன்னதாக, கொச்சி கொண்டு வரப்பட்ட 45 தொழிலாளர்களின் உடல் களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜ யன், ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக வெளிநாடு வாழ் தமிழர்  நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கேரள அமைச்சர்கள் வீணா ஜார்ஜ், பி. ராஜீவ், ரோஸி அகஸ்டின், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தைப் பொறுத்தவரை, தூத்துக்குடியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரை சேர்ந்த சின்ன துரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை  ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சிவ சங்கர் கோவிந்தன், திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரீப், இராமநாத புரத்தை சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகிய 7 பேரின் உடல்கள் கொச்சி வந்திறங்கின. தமிழ்நாடு அரசு  ரூ. 5 லட்சம் நிவாரணம் இவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக தமிழ் நாடு அரசு தனித்தனி ஆம்புலன்ஸ்சு களை ஏற்பாடு செய்திருந்தது. தொழி லாளர்களின் உடல்களை தாமதமின்றி அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யிருந்தார். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் முதலமைச்சர் அறி வித்திருந்தார். அந்த அடிப்படையில் தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

உயிரிழப்பிலும் அரசியல் செய்த மோடி அரசு

குவைத் செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

குவைத் தீ விபத்தில் பலியானோர், படுகாயம் அடைந்தவர்களில் அதிகமானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையிலான ஒரு குழுவை குவைத் அனுப்பி வைக்க கேரள அமைச்சரவை முடிவு செய்தது.  அதன்படி கேரள மாநில சுகா தாரத்துறைத் அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்வதற்காக நெடும்பஞ்சேரி விமான நிலையத்திற்கு சென்றார். ஆனால், அவரை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். அரசு உயர் அதிகாரிகளோ அமைச்சர்களோ வெளிநாடு செல்ல வேண்டும் எனில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அரசியல் தடை இல்லாச் சான்று அளிக்க வேண்டும் என்ற நிலையில், அதனை அளிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இது தவறான அணுகுமுறை இதற்காக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கேரள அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள் ளது. அமைச்சர்  வீணா ஜார்ஜூம், “இது ஒன்றிய அரசின்  தவறான  அணுகுமுறை”  என கூறியிருப்பதுடன், “தீக்காயம்  அடைந்தவர்களின் உண்மை யான எண்ணிக்கையையும் இந்திய தூதரகம் அளிக்க வில்லை” என்று  சாடி உள்ளார். இதேபோல குவைத் தீ விபத்தில்,  உயிரிழந்த தமிழர்கள் குறித்து, ஒன்றிய அரசின் தூதரகம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை; அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலம் விசாரித்தே 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதாக, தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

;