கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழி யில் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல், திமுக கூட்ட ணியில் கமல்ஹாசன் மற்றும் திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
நலமாக உள்ளார் முதலமைச்சர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள் ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனை இயல்பாக இருந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோவுக்கு பாராட்டு; கமல்ஹாசனுக்கு வாழ்த்து
சென்னை: பதவிக்காலம் நிறைவு பெற்ற நாடாளு மன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப் பேற்கவுள்ள எம்.பி.க்களை வாழ்த்தியும் திமுக தலை வரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமை களையும் சங்கநாதமென முழங்கிய அன்பு அண்ணன் வை கோவுக்கு பாராட்டுகள், அருமை நண்பர் கமல்ஹாசன் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பின ராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பணி யாற்றி தனக்கு கிடைத்த நீண்ட அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்க நாதமென முழங்கியவர் என்று முதலமைச்சர் பாராட்டி யுள்ளார். வைகோ ஜூலை 24 ஆம் தேதி மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் கலைஞரையும், கலை ஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனை யும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், தனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வைகோ 8 இடங்களில் பிரச்சாரம்: அட்டவணை வெளியீடு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ கத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறி விக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கட்சிப் பிரச்சாரத்தை தொடங்கி விட்டுள்ளன. மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தமிழகத்தின் எட்டு இடங்களில் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகத்தினர், தமிழக உரிமைகளுக் காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள், பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் நெல்லை மாணவர் முதலிடம்
சென்னை: நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தர வரிசையில் முத லிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் 655 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் இரண்டாம் இடமும், 653 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஹிருதிக் விஜயராஜா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாணவர் ராகேஷ் நான்காவது இடம், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி ஐந்தாவது இடம், விருதுநகர் மாணவர் நிதின் பாபு ஆறாவது இடம், சென்னை மாணவர் கைலேஷ் கிரண் ஏழாவது இடம், சென்னை மாண வர் நிதின் கார்த்திக் எட்டாவது இடம், தர்மபுரி மாணவர் பிரக தீஷ் சந்திரசேகர் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளனர். தர வரிசைப் பட்டியலில் தேனியைச் சேர்ந்த மாணவி பொன் ஷரினி பத்தாவது இடம் பிடித்துள்ளார்.
ராமதாசுக்கு வாழ்த்து
சென்னை: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, நீண்ட ஆயுளோடு, பொது வாழ்க்கைப் பய ணம் தொடர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார்.
நிதி மோசடி வழக்கில் சொத்துகளை மறைத்த தேவநாதன் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை, ஜூலை 25 - மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவன நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு தேவநாதன் மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு முன், இரண்டு முறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தாக்கல் செய்த இம்மனு வில், தேவநாதன் மற்றும் அவருடன் தொடர் புடைய மற்றவர்களும் ஜாமீன் கோரியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக் கிழமை (ஜூலை 25) உயர்நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது, பாதிக்கப்பட்ட முதலீட்டா ளர்கள் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜ ரானார். அவர், தனது வாதத்தின்போது, “மனு தாரர்கள் (தேவநாதன்) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.300 கோடிக்கான சொத்து ஆவ ணங்களை ஆய்வு செய்ததில், பல சொத்து களின் மதிப்பீடு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்துக்களின் (நிலம்) அளவு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. பாதியிலும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள்” என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான முழு சொத்து விவரங்களின் உண்மையான பட்டியலை வருகிற வெள்ளிக்கிழமைக்குள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.