tamilnadu

img

சிபிஎம் விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.அர்ஜூனன் தேர்வு

சிவகாசி, டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட 23 வது மாநாடு டிசம்பர் 12, 13 ஆகிய தேதி களில் சிவகாசியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு எம்.மகாலட்சுமி, வி.முருகன், எஸ்.வி.சசிகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.   மாநாட்டில், 41 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் மாவட்டச் செயலா ளராக கே.அர்ஜூனன் தேர்ந் தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஜி. வேலுச்சாமி, ஆ.குருசாமி, பி.என்.தேவா, எம்.தாமஸ் சேவியர், எஸ்.லட்சுமி, எம். மகாலட்சுமி, அ.விஜயமுரு கன், எம்.முத்துக்குமார், வி. முருகன், எல்.முருகன், எம். சுந்தரபாண்டியன், கே.முரு கன் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பேசினார்.

வரவேற்புக்குழு தலைவர் இ.பழனி நன்றி கூறினார். மாநாட்டில், 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திடும் வகையில் சுற்றுச்சூழல் விதி யிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் படித்த, கிராமப்புற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும். ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்திட வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி விசைத்தறி தொழிலை பாது காக்க வேண்டும்.  திருவில்லிபுத்தூர், திருச் சுழி ஆகிய பகுதியில் அறி விக்கப்பட்டுள்ள அரசு கலை கல்லூரிகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். இராஜபாளையத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். தொடர்மழை யால் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். மூன்று முறை வந்து சென்ற மதுரை - செங்கோட்டை உட்பட பய ணிகள் ரயில்களை வழக்கம் போல் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;