சிபிஎம் க.பரமத்தி ஒன்றியச் செயலாளராக கே.குமாரசாமி தேர்வு
கரூர், ஆக. 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு மாநிலக் குழு முடிவுகள் குறித்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.கந்தசாமி, ப.சரவணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கே.குமாரசாமி, கே.பழனிச்சாமி, ஏ.ஆர்.சொரணையப்பன், ச.ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஒன்றியத்தின் புதிய செயலாளராக கே. குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.