அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஜெயங்கொண்டம் நகர்மன்றம் தீர்மானம்
அரியலூர், அக். 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நகர மன்றத் தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக நகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்துப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். வாரச்சந்தை ஏலம் முறையாக சட்டப்படி நடத்த வேண்டும். மூன்றாவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவும் கொம்மேடு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், கீழத்தெரு பகுதியில் சாலை வசதி மற்றும் அப்பகுதியில் கறிக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மேலாளர் (பொ) ராணிஸ்டெல்லா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வரா,ஜ் சுப்பிரமணியன், சேகர், தங்கபாண்டியன், ரங்கநாதன், அம்பிகாபதி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் மற்றும் ஓவர்சியர் பூபதி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
