tamilnadu

img

கொத்தடிமைகளாக வாழ்ந்த இருளர் இன மக்களை மீட்டெக்கும் திட்டத்தில் முறைகேடு

கொத்தடிமைகளாக வாழ்ந்த இருளர் இன  மக்களை மீட்டெக்கும்  திட்டத்தில் முறைகேடு

நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக 25- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் வாழவந்தான் கோட்டையில்  இருளர் இனத்தை  சேர்ந்தவர்கள் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாழ்ந்தான் கோட்டையில்  கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு தமிழ்நாடு அரசின்,  *விடியல் திட்டத்தின்”  சார்பில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தாழம்பூ ஆடு வளர்ப்பு ஒத்த தொழில் குழு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவிற்கு ரூ. 7 லட்சம் பணம் வழங்கப்பட்டது‌. செல்லம்மாள்,விஜயா, பானுப்பிரியா, எல்லம்மா,  முத்தம்மா, உமா உள்ளிட்ட 23 நபர்களுக்கு தலா 3 ஆடுகள்  என 75 ஆடுகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில்  ஆடுகள் பிடிக்க ஊரக வாழ்வதார மாவட்ட  அலு வலகத்தில் பணியாற்றிய புனிதா, பூண்டி வட்டார இயக்க மேலாளர் சங்கீதா ஆகியோர் கும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அழைத்து சென்று பெரிய ஆடுகளை பயனாளிகளிடம் காட்டியுள்ளனர். பின்னர் புனிதாவின்  உறவினர் தேவா என்பவர் பெயருக்கு  75 ஆடுகள் வாங்க ரூ.5 லட்சம் காசோலையை  வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஆனால் பயனாளிகளிடம் காட்டிய பெரிய ஆடுகளை வாங்காமல் மறு நாள் ஆந்திராவில் கூடூர் சந்தை யில் இருந்து ஒவ்வொரு பயனாளி களுக்கும் 3 ஆட்டு குட்டிகளை கொண்டு வந்து வாழ்ந்தான் கோட்டை யில் புனிதா  இறக்கியுள்ளார். அடுத்த மூன்று நாட்களில் 5 குட்டிகள் வெப்பம் தாளாமல் இறந்து விட்டன. வட்டார இயக்க மேலாளரிடம் தகவல் தெரி வித்ததும்  5 ஆட்டுக்குட்டிகளை  வாங்கி கொடுத்துள்ளனர். மீண்டும் 7 ஆடுகள் இறந்து விட்டது. உடனடியாக புனிதா விடம்  தெரி வித்துள்ளனர்.எனினும் கண்டு கொள்ளவில்லை. 52  ஆட்டு குட்டிகள் பலி இதனைத் தொடர்ந்து  ஆட்டு குட்டிகள் ஒவ்வொரு நாளும்  இறந்த தால்,  அம்மக்கள் சோகத்தில் மூழ்கினர். இப்படி 52 ஆட்டுக்குட்டி களும் இறந்தன. ஊரக வாழ்வாதார மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றிய புனிதா, வட்டார இயக்க மேலாளர் சங்கிதா ஆகிய இருவரும் இருளர் இன மக்களை ஏமாற்றியுள்ளனர் என அம்மக்கள் புலம்புகின்றனர். பெரிய ஆடுகளை  வாங்கி கொடுக்காமல்,  மிகவும் குறைந்த விலையில் ஆட்டு குட்டிகளை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் ஆட்டு குட்டிகளுக்கு காப்பீடு செய்து கொடுக்க வில்லை. இதனால் இழப்பீடும் கிடைக்கவில்லை.  பயனாளிகளிடம் நேரடியாக பணம் கொடுத்து இருந்தால் அவர்களே ஆரோக்கிய மான ஆடுகளை பிடித்து இருப்பார் கள். இதனால் இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்திருக்கும். இந்த நிலையில் செத்துப்போன ஆட்டுக் குட்டிகளுக்கு தங்களால் பணம் திரும்ப செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். ஆட்டு குட்டிகளை வாங்கி கொடுத்து ஏமாற்றிய ஊரக வாழ்வதார இயக்க பணியாளர்கள் மீது உரிய விசாரணை செய்து,  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க மானிய  த்துடன் கூடிய வங்கி கடனை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஆக 25), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர். கண்டு கொள்ளாத நிர்வாகம் ஏற்கெனவே வாழவந்தான்கோட் டையில் மீன்பிடி வலைகள் வாங்கி கொடுத்ததில், பிஞ்சிவாக்கத்தில் செங்கல் சூளை அமைத்ததில், ஆரம்பாக்கத்தில் ஐஸ் பெட்டிகள் வாங்கி கொடுத்ததில் ஏராளமான அளவில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளது. எதையும் மாவட்ட நிர்வாகமும், ஊராக வாழ்வாதார திட்ட இயக்ககம் கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்ட துணைத் தலைவர் அற்புதம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.