tamilnadu

img

பாஜக தலைமை திட்டமிட்டு நடத்திய கொலை சந்தீப் குடும்பத்தை கட்சி பாதுகாக்கும்

பத்தனம்திட்டா, டிச. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிங்கரா வட்டாரச் செயலாளர் பி.பி.சந்தீப்  படுகொலை பாஜக தலைமையால் திட்டமிடப் பட்டது என்றும், சந்தீப்பின் குடும்பத்தை எந்த நிலையிலும் கட்சி பாதுகாக்கும் என்றும் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். அவரது இரு குழந்தைகளும் எந்த உயர்கல்வியைப் பெற விரும்பினாலும் அதற்கான செலவை முழுமையாக கட்சி ஏற்கும், மனைவிக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் வேலை கிடைக்க கட்சி  உதவும் எனவும் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். ஆர்எஸ்எஸ் கும்பல் கொடூரமாக படுகொலை செய்த சந்தீப்பின் இல்லத்திற்கு சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஞாயிறன்று நேரில்சென்றார். பிறந்து 3 மாதமே ஆன சந்தீப்பின் இரண்டாவது குழந்தையை கையில் ஏந்தியபடி, இந்த வாக்கு றுதியை குடும்பத்தினருக்கு அளித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: சந்தீப் படுகொலை கேரளத்தை நடுங்க வைத்துள்ளது. இப்போதும் நாங்கள் அமைதி காப்பதை பலவீனமாக எவரும் கருதவேண் டாம். இதுபோன்ற கொடிய செயல்களுக்கு எதி ராக ஜனநாயக முறையில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். கொலையை மார்க்சிஸ்ட் கட்சியே செய்ததாக இதற்கு முன்பும் கூறியதுபோல் இதிலும் கூறுகிறார்கள். வெஞ்ஞாரமூடு இரட்டைக் கொலையிலும் இதைப் பார்த்தோம்.  ஏற்கெனவே இ.பி.ஜெயராஜனை துப்பாக்கி யால் சுட்ட இருவரும் ஆர்எஸ்எஸ்காரர்கள். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை கைவிட வேண்டும். இந்த படுகொலை பாஜக  தலைமையால் திட்டமிடப்பட்டது. பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்த பாஜக தலைவர் ஒருவரால் நடத்தப்பட்டது. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர் களை சட்டத்தின் முன் நிறுத்த விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றார் கொடியேரி

ஊராட்சி கூட்டத்திலும் பாஜக மிரட்டல்

சந்தீப்பின் வீட்டுக்கு கொடியேரி பால கிருஷ்ணன் வந்தபோது அவருடன் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சனல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், (டிசம்பர் 4) சந்தீப்பின் பிறந்த நாளும்கூட. அவருக்கு அஞ்சலி செலுத்து வதற்காக ஊராட்சி கூட்டம் நடந்தது. அஞ்சலி தீர்மானத்திற்கு பாஜக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். கூட்டம் முடிந்ததும் பாஜக உறுப்பினர் விஷ்ணு நம்பூதிரி தனக்கு ஒரு விசயம் தெரிவிக்க உள்ளதாக கூறி, இதற்குமேல் பாஜகவினருக்கு எதிராக ஏதாவது நடந்தால் பஞ்சாயத்தையே எரித்து விடுவோம் என்றும், பாஜகவால் என்ன செய்ய முடியும் என்பதை பார்த்துவிட்டீர்கள் அல்லவா என்றும் கேட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். அப்போது பஞ்சாயத்து தலைவரும் உடனிருந்தார்.  சனல்குமார் மேலும் கூறுகையில், இது ஒரு திட்டமிட்ட அரசியல்கொலை. பாஜக தலைவர் கே.சுரேந்திரன் விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.      

திசை திருப்பல் முயற்சிகள்

சந்தீப் படுகொலையைத் திட்டமிட்ட பாஜக தலைவர்கள் தங்களுக்கு எந்தப் பங்கும்  இல்லை என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டு ள்ளனர். இதற்கு சமூக ஊடகங்களையும் ஒருபகுதி வலதுசாரி ஆதரவு ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். கொலை நடந்த சிறிது நேரத்திலேயே சங்பரிவார் அமைப்பு கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யத் தொடங்கின. குற்றம்சாட்டப்பட்ட வர்கள் சிபிஎம் அணியினர் என்று பாஜக மாநி லத் தலைவர் கே.சுரேந்திரனின் குற்றச்சாட்டும் இதில் ஒரு பகுதியாகும். யுவமோர்ச்சா தலைவர் தலைமையில் கொலை நடந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிபிஎம் உறுப்பி னர்கள் என்று சுரேந்திரனின் அறிக்கை வெள்ளி யன்று காலை வெளியானது. மனோரமா, மாத்ருபூமி உள்ளிட்ட வலதுசாரி ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.
 

;