tamilnadu

img

​​​​​​​கேரளாவில் சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

கேரளாவில் சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த   ஆண்டு நடைபெற்ற எம்எஸ்எம்வி மாநாட்டில், சிறந்த வணிகம் மற்றும் தலைமைத்துவத்திற்கான “எம்எஸ்எம்இ குறைந்த பட்ஜெட் கட்டுமானத்தில் சிறப்புச் சுடர் விருது” (BEACON OF EXCELLENCE  IN MSME BEST BUDGET CONSTRUCTION) சந்தோஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. தேசிய சிறு தொழில்கள் கழகம் (NSIC) மற்றும் கேரள தொழில்துறை மேம்பாட்டு பணியகம் (K-BIP) ஆகியவற்றுடன் இணைந்து “வாழ்வின் நிறங்கள்” (HUES OF LIFE) அமைப்பு ஏற்பாடு செய்த இந்த புகழ்மிக்க நிகழ்வில், அமைச்சர் ஓ.ஆர்.கேளு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, ஐ.பி. சதீஷ் சட்டமன்ற உறுப்பினர், என்எஸ்ஐசி கிளை மேலாளர் கிரேஸ் ரெஜி, கவடியார் தர்மன் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  இந்த விருது சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சிறப்பான சேவைகளையும், பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.