819 வீரர்களுக்கு ஊக்கத் தெகை
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டி யில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்கு ரூ.1.80 கோடியும், துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, கூடைப்பந்து, வூஷு, சாப்ட் டென்னீஸ், ஹாக்கி, பளுதூக்குதல், பீச் வாலிபால், தடகளம், ஸ்குவாஷ், அலைச்சறுக்கு, சைக்கிளிங், நீச்சல் போட்டி, டென்னிகோயிட், படகுப் போட்டி, செஸ், வாலிபால், டென்னிஸ், வாள்வீச்சு, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பேட்மிண்டன், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்கள் என மொத்தம் 819 வீரர் களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் சார்பில் ரூ.21.40 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை
சென்னை: மகளிர் உரிமைத் தொகை இன்னும் அதிகப் பேருக்கு கிடைக்கும் என்று துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை சென்றடைய விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன. மகளிர் உரிமை தொகை அதிகம் பேருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை 90% சதவீதம் மக்கள் மருத்துவத் துக்கு பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.
நாளை குரூப் 2, 2ஏ தேர்வு
சென்னை: ஞாயிறன்று (செப்.28) நடக்கவுள்ள குரூப் 2, 2ஏ தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறவுள்ளது.
சீமான் மீதான வழக்கு ரத்து
சென்னை: 2018 ஆம் ஆண்டில் நடந்த கூட்டத்தில் தமிழ் ஈழம், நியூட்ரினோ, சேலம் 8 வழிச் சாலை திட்டம் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு எதிராக சீமான் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சு கல வரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி துணை காவல் ஆய்வாளர் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர் பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விஜய் பதிலளிக்க உத்தரவு
சென்னை: தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன் சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தங்களுடைய வர்த்தக கொடி யைப் போல் தவெக கொடி இருப்பதால், தவெகவினர் சிவப்பு, மஞ்சள் நிறங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. இம்மனுவை வெள்ளி யன்று விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து 6 வாரங்களில் பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது.
62 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
சென்னை, செப்.26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தம் 62 பேருக்கு பணி நியமன ஆணை களை வழங்கினார். இதில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை யில் 38 பேரும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் 18 பேரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 பேரும் அடங்குவர். மீன்வளத்துறையில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் வாயிலாக 23 மீன் துறை சார் ஆய்வாளர், 12 உதவி யாளர் மற்றும் 3 இளநிலை கணக் காளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் தொழிற்நுட்பர் (இயக்கு பவர்) பணியிடத்திற்கு 15 நபர் களும், விரிவாக்க அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு 3 நபர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு இணை யம் மற்றும் மாவட்ட உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு ஒன்றியங் களில் பணிபுரிவர். தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் பல்கலைக்கழ கத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சிறப்பு நியமனம் அடிப்படையில் 2 உதவிப் பேரா சிரியர், 1 பண்ணை மேலாளர், 3 குறிப்பான் ஆகிய பணியிடங் களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச் சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் இருந்தனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப் பெற்றது: வானிலை மையம்
சென்னை: மத்திய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்தது. இருப்பினும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வடமேற்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவியது. மஞ்சள் எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா - ஒடிசா கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கக் கூடும். மேலும் அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ் நாட்டில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால், செப். 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் மஞ்சள் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் காலில் 6, 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணா குகை கண்காட்சியை நிறுத்த உத்தரவு
மதுரை: குணா குகை கண்காட்சியை உடனடி யாக நிறுத்த உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குணா குகை கண் காட்சியில் அடிப்படை வசதி இல்லை என கூறி சபீனா பானு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு விசா ரணையில், மதுரை ஐயர் பங்களா பகுதியில் ‘குணா குகை கண்காட்சி’ செப்.7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. 15 நிபந்தனை களுடன் கண்காட்சிக்கு அனுமதி தந்த நிலையில் அதில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வில்லை என தீயணைப் புத் துறை தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிபந்தனை களை நிறைவேற்றிய பின் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி யதும் கண்காட்சியை தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள னர்.
‘ஓபிஎஸ், தினகரனைச் சந்திக்கவில்லை’
ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற வர்களை ஒருங்கி ணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனி சாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப் பட்டு ஓரங்கட்டி வைக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக் கைகள் தொடர்பாக கோபி செட்டிப்பாளை யத்தி லுள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இத னிடையே சென்னையில் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து பேசியதாக தக வல் வெளியானது. இது தொடர்பாக ஈரோட் டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங் கோட்டையன், “யாரை யும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு என வதந்தி பரப்புகின்றனர். மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென் னைக்குச் சென்றேன். வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதிமுகவில் பிரிந்திருக் கும் சக்திகள் ஒருங்கி ணைய வேண்டும் என்ப தற்காக பேசி வருகிறேன்” என்றார்.