முத்துக்குடா கடற்கரையில் முடிவுற்ற பணிகள் துவக்கி வைப்பு
அறந்தாங்கி, ஆக.1 - புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடற்கரையில் ரூ.3.06 கோடியில் கட்டப்பட்டு உள்ள பார்வையாளர் கூடம், நிர்வாக கட்டி டம், வாகன நிற்கும் இடம், நடைபாதை, படகு துறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முத்துக்குடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் பிரபுதாஸ், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கார்த்திக், உதவி செயற்பொறியாளர் (சுற்று லாத்துறை) ரத்தினவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.