சாலியமங்கலம் அருகே, திருபுவனம் ஊராட்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத்தை, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில் அம்மாபேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், திமுக அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலர் குமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.