7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,டிச.4- தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல் ்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருவண்ணா மலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிறன்று(டிச.5) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 6 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஒருசில இடங்களில் மிதமான மழையும், 7 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும். 8 ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங் ்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மனுதாக்கல்
சென்னை,டிச.4- அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதிமுக உள்கட்சி தேர்தல் நடை பெறுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் பதவிக்கு சனிக்கிழமை (டிச.4) வேட்புமனுதாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தேர்தல் பொறுப்பா ளர்களான பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் பெற்றுக் கொண்டனர்.'
கூட்டுறவு சங்க மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து : தமிழக அரசு
சென்னை,டிச.4- கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடனை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:- கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு வினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 விழுக்காடு வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடு விக்கவும் அனுமதிக்கப்படுகிறது என தெரி விக்கப்பட்டு உள்ளது.
வீடு திரும்பினார் கமல்ஹாசன்
சென்னை,டிச.4- கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் குணம டைந்ததால் வீடு திரும்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை வர் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப் ்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ள தாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணம டைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்குத் தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளி யிட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (டிச.4) கமல்ஹாசன் மருத்துவமனையி லிருந்து வீடுதிரும்பினார்.