tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழக டிஜிபிக்கு  மனித உரிமைகள்  ஆணையம் நோட்டீஸ்!

சென்னை, ஜூலை 3 - சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு,  தமிழக டிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. நாளிதழில் வெளி யான செய்தியின் அடிப்படை யில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணை யம் தெரிவித்திருக்கிறது. 

தங்கம் விலை 3 நாட்களில்  ரூ.1500 உயர்வு

சென்னை, ஜூலை 3 - ஆபரணத் தங்கத்தின் விலை, தொடர்ந்து மூன்றா வது நாளாக பவுனுக்கு ரூ. 320 உயர்ந்தது. ஜூன் 30 அன்று பவுன் ரூ. 71 ஆயி ரத்து 320-க்கு விற்கப்பட்ட தங்கம், ஜூலை 1அன்று கிராமிற்கு ரூ. 105 உயர்ந்து பவுன் 72 ஆயி ரத்து 160 ஆக உயர்ந்தது. ஜூலை 2 அன்று கிராமிற்கு ரூ. 45 உயர்ந்து, பவுன் 72 ஆயிரத்து 420-ஐ எட்டி யது. இந்நிலையில், வியாழ னன்று (ஜூலை 3) கிராமிற்கு ரூ. 40 உயர்ந்து பவுன் ரூ. 72 ஆயிரத்து 840 ஆக உயர்ந்து ள்ளது. 3 நாட்களில் ரூ. 1500 வரை விலை உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது!

சேலம், ஜூலை 3 -  காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்த தால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெளியேற்றப் பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால்  வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,124 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழி யாக விநாடிக்கு 22,067 கன அடி நீரும், உபரி நீர் போக்கி  வழியாக விநாடிக்கு 1,732  கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாச னத்திற்கு விநாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வரு கிறது. அணையின் நீர்மட்டம் 119.91 அடியாகவும் நீர்  இருப்பு 93.32 டிஎம்சியாக வும் உள்ளது.