tamilnadu

img

ஜிஎஸ்டி சாலை நடைமேம்பாலத்தை மெப்ஸ் வரை நீட்டிக்க வேண்டும்

ஜிஎஸ்டி சாலை நடைமேம்பாலத்தை மெப்ஸ் வரை நீட்டிக்க வேண்டும்

பொதுத்தொழிலாளர் சங்க பேரவை கோரிக்கை

சென்னை, ஆக. 3 - ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தை மெப்ஸ் நுழைவாயில் முன்பு வரை நீட்டிப்பு செய்ய வேண்டு மென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் 11வது  பேரவை ஞாயிறன்று (ஆக.3) தாம்பரத்தில் நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலத்தில் உள்ள நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) பழுதடைந்து உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய  வேண்டும். தொழிலாளர்கள் சிரமம் இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் வேலைக்கு வந்து செல்லும் வகையில் மெப்ஸ் வளாகத்தை மாற்றி அமைக்க வேண்டும், மெப்ஸ்க்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். மெப்ஸ் வளாகத்தில தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பெற்றுள்ள  தடையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவைக்கு சங்கத்தின் பொறுப்பு தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு கொடியை துணைத் தலைவர் டி.ஜெயந்தி ஏற்றினார். துணைச் செயலாளர் எஸ்.பாலாஜி வரவேற்றார். துணைத் தலைவர் இ.சாந்தாராம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மா.விஜயகுமார் பேரவையை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் ஏ.சாதிக்பாஷாவும், வரவு-செலவு அறிக்கையை பி.பால்துரையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சந்தானம், முறை சாரா சங்க மாவட்ட பொதுச் செய லாளர் யு.அனில்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவு ரையாற்றினார். சங்க துணைச் செயலாளர் வி.முத்தையா நன்றி கூறினார். சங்கத்தின் கவுரவத் தலைவராக அ.சவுந்தரராசன், தலைவராக பா.பால கிருஷ்ணன், பொதுச்செயலாளராக ஏ.சாதிக்பாஷா, பொருளாளராக எஸ்.லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டனர்.