தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
சென்னை, அக். 24 - தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை 5 நாட்களுக்கு சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டா ளர் பயிற்சி” வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோ கங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate), ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத் தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9840114680/9360221280 என்ற எண் களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.