tamilnadu

img

உலக வர்த்தகம் இந்தியா செல்ல வேண்டிய பாதை - பி தட்சிணாமூர்த்தி

உலக வர்த்தகம் : இந்தியா செல்ல வேண்டிய பாதை

உலகளாவிய வர்த்தக  முக் கியத்துவம் வாய்ந்த குறுகிய கடல் வழிப் பாதைகளான மலாக்கா, ஹோர்முஸ், பாப்-எல்-மண்டேப் நீரி ணைகள், சூயஸ் கால் வாய், சூயஸ்-மத்திய தரைக்கடல் எண்ணெய் குழாய்வழி (SUMED), பனாமா கால்வாய் போன்றவை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் புவிசார் மேலா திக்கத் திட்டங்களுக்கு இலக்காகும் இடங் களாக உள்ளன. குறிப்பாக, மலாக்கா, ஹோர்முஸ், பாப்-எல்-மண்டேப் நீரிணைகள், சூயஸ் கால்வாய் ஆகியவை மக்கள் சீனத்திற்கும் அதன் வணிக நாடுகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் புள்ளிகளாக இருக்கின்றன. உலக வர்த்தகப் பாதைகளும் அமெரிக்க ஆதிக்கமும் மலாக்கா நீரிணைப்பு : ‘மலாக்கா டைலெமா’ : மலாக்கா நீரிணைப்பு, இந்தியப் பெருங்கடலை தென் சீனக் கடலுடன் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழிப்பாதை. சீனாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 80% மற்றும் தினசரி 23.7 மில்லியன் (2.37 கோடி) பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த வழியே நடக்கிறது. இந்த நீரிணையில் சீனாவின் கடல் போக்குவரத்து தடைபடுவதன் மூலம் அதன் வளர்ச்சியை முடக்குவதற்கான காரணிகளை உருவாக்குவதைத்தான், 2003 ஆம் ஆண்டு சீனாவின் தலைவர் ஹு ஜின்டாவோ “மலாக்கா டைலெமா” அல்லது “மலாக்கா தடுமாற்றம்” எனக் குறிப்பிட்டார். தென் சீனக் கடலின் பிராந்திய நாடுகளின் கவலைகளைத் தூண்டிவிட்டு, சீனத்திற்கு எதிரான நிலையை அமெரிக்கா உருவாக்குகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு ஏழாவது கடற்படை உட்பட வலுவான கடற்படை யை அமெரிக்கா பராமரித்து வருவது இதன் ஒரு பகுதியே. ஹோர்முஸ் நீரிணைப்பு மற்றும் மத்திய கிழக்கு : பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணைப்பு, உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்துக்கு மிக  முக்கியமானது. உலக எண்ணெய் போக்கு வரத்தில் சுமார் 20% முதல் 30% வரை இதன் வழியே செல்கிறது. மத்திய கிழக்கு எண் ணெய்யை சீனா அதிகம் சார்ந்திருப்பதால், இதன் அமைதியும் பாதுகாப்பும் சீனாவின் தேவை. சவூதி அரேபியா-ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவர 2023-ல் சீனா மத்தி யஸ்தம் செய்து வெற்றி கண்டது, இப்பிராந்திய அமைதியில் அதன் ஆர்வத்தைக் காட்டுகிறது.  இருப்பினும், மத்திய கிழக்கில் உள்ள பல நாடு களில் அமெரிக்கா தனது படைத்தளங்களை நிறுவி ராணுவமயமாக்கி உள்ளது. சீனாவின் மற்றும் அதன் எண்ணெய் கூட்டாளிகளின் வணிகத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். பாப்-எல்-மண்டேப் மற்றும் சூயஸ் கால்வாய் : பாப்-எல்-மண்டேப் நீரிணைப்பு செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப்  பெருங்கடலுடன் இணைக்கிறது. இது உலக ளாவிய எரிசக்திக்கு மற்றொரு முக்கிய நீர்  இணைப்பாக உள்ளது. செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலை இணைக்கும் சூயஸ்  கால்வாய் மற்றும் சுமெட் (SUMED) குழாய்வழி எகிப்தில் உள்ளது. சீனாவின் எண்ணெய் தேவையில் சுமார் 40% மத்திய கிழக்கி லிருந்து பெறப்படுகிறது. மத்திய கிழக்கில் தொட ரும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலின் தாக்கு தல்கள் மற்றும் பாலஸ்தீன மக்களின் மீதான அநீதிகள் பிராந்தியக் கப்பல் போக்குவரத்தைச் சிக்கலாக்கி, வர்த்தக விநியோகச் சங்கிலியைத் தகர்க்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க் கிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் மோதல் நீடித்தால் சீனா கடுமையாகப் பாதிக்கப்படும் என அமெரிக்கா கணக்கிடுகிறது. மத்திய கிழக்கின் பதற்றம், பாலஸ்தீனத்தில் இஸ்ரே லின் குற்றங்கள் யாவும் வளைகுடா பகுதி யின் எண்ணெய் மீதான அமெரிக்கச் சதிகளின் ஒரு பகுதியே. இஸ்ரேலை நிரந்தரமான அடி யாளாக மாற்றுவதுடன், மக்கள் சீனத்தின் செல்வாக்கையும், வர்த்தக முன்னேற்றத்தை யும் தடுத்து நிறுத்துவது இதன் முக்கிய நோக்கம். சீனத்தின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) மேற்கூறிய அமெரிக்க ஆதிக்கத்திற்கு மாற்றீடாக, சீனத் தலைவர் ஜி ஜின்பிங் 2013-ல் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (BRI)  முதன்முதலில் அறிவித்தார். இது எண்ணெய்/எரிசக்தி வளங்களைப் பெறுவதை உறுதி செய்தல், புதிய சர்வதேச வர்த்தக வழித்தடங் களை உருவாக்குதல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்தல் ஆகிய வற்றை இலக்காகக் கொண்டது. உள்கட்ட மைப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி துறைகளில் விரிவாக முதலீடு செய்ய இத்திட்டம் (BRI) உருவாக்கப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் தாக்கம் அமெரிக்க-ஐரோப்பிய வல்லுநர்கள் இதை மனித குலம் இதுவரை சந்தித்திராத பிரம்மாண்டமான திட்டம் எனக் கருதுகின்ற னர். மே 2025 நிலவரப்படி, சுமார் 150 நாடு கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளன. இத்திட்டம் 2049-இல் நிறைவடையும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆய்வுகளின்படி, இது பங்கேற்கும் நாடுகளின் வர்த்தக ஓட்டங்களை 4.1% வரை அதிகரிக்க வும், உலகளாவிய வர்த்தகச் செலவை 1.1% முதல் 2.2% வரை குறைக்கவும் வல்லது. சிஇபிஆர் (CEBR) அறிக்கையின்படி, 2040-க்குள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுக்கு 7.1 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும். மத்திய கிழக்கு உலக விவகார கவுன்சிலின் (20.10.2024) ஆய்வறிக்கை, பிராந்திய பாது காப்பில் அமெரிக்காவின் நிலை நிச்சய மற்று இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகள் படிப்படியாக புதிய திசைக்கு மாறி வருவதாக வும், பெல்ட் அண்டு ரோடு திட்டம் (BRI) தொடங்கப் பட்டதிலிருந்து சீனத்துடனான பொருளாதார ஒத்துழைப்பு பல பகுதிகளில் கணிசமாக வளர்ந்துள்ளதாகவும் கூறுகிறது. செங்கடல்-மத்திய கிழக்கின் நெருக்கடிகளைச் சமாளித்து சீனா உறுதியாக முன்னேறி வருகிறது. இது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் பெல்ட் திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் வாகனமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) (சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகள்) கருதப்படுகிறது. சீன மற்றும் ரஷ்யாவின் இணக்கமான நடவடிக்கை கள் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) அமைப்புகளை மேலும் வலுவாக்கி மாற்று சக்தியாக வளர்த்து வருகின்றன. இது  டிரம்ப் நிர்வாகத்தை இஞ்சி தின்ற குரங்கு போல ஆக்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண் ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக இந்தியா மீது டொனால்டு டிரம்ப் 50% வரி உயர்வை விதித்து தண்டித்தது, இதன் பின்ன ணியிலேயே நடந்தது. இது ஒரு வக்கிரத் தாக்குதலே. இந்தியாவும்  சோசலிசப் பாதையும் பிரதமர் மோடி, “நமது மிகப்பெரிய தடை, நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான்” என்று கூறியது, அமெரிக்க நிர்வாகத்தின் மீதான தீவிர வலதுசாரி சார்பைக் கைவிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. “ஒரு தொலைதூர உறவினர் நெருங்கிய அண்டை வீட்டாரைப் போல நல்லவர் அல்ல” என்ற கருத்தின்படி, ஆசிய அண்டை வீட்டின் நண்பர்களுடன் இந்தியா நெருக்கமான உறவு கொள்ள வேண்டும். ஜி-20 உச்சிமாநாட்டின்போது அமெரிக்கா வால் உருவாக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC), சீனத்தின் பெல்ட் அண்டு ரோடு திட்டத்திற்குப் போட்டியானது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மற்றொரு நேட்டோ அடியாளான குவாட் ராணுவ அமைப்பி லும் மோடி இணைந்துள்ளார். பிரிக்ஸ் அமைப் பின் குறிக்கோள்களான உலக அமைதி, பன்முகத்தன்மை, சமமான உலக ஒழுங்கை அடைதல் ஆகியவற்றிற்குள் இருந்து கொண்டே, இத்தகைய ஐஎம்இசி (IMEC) மற்றும்  குவாட் அமைப்புகளில் இந்தியா முக்கிய நபராக இருப்பது அடிப்படையிலேயே மிகப்பெரும் முரண்பாடுகள். இது பிரிக்ஸின் நோக்கங் களை நீர்த்துப்போகச் செய்வதாகும். சோசலிச முன்னேற்றத்தில் மக்கள் சீனத்தின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, சோசலிசத்தின் வெற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நோக்கத்தைக் கொண்டது. புதியதொரு வடி வத்தில் இந்தியா அதில் இணைய வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடி வரலாறு காணாத அளவிற்குத் தளர்ந்து வரும் இக் காலத்தில், அமெரிக்காவின் குவாட் அமைப்பி லிருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும். மத்திய கிழக்கில் இனப்படுகொலைகளை அரங்கேற்றிய இஸ்ரேலுக்கும் அதற்கு ஆதர வளித்த அமெரிக்காவிற்கும் எதிராக உலக நாடு கள் எழுப்பிய கண்டனத்தின் விளைவாகவே தற்போது அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும்.