பொது வேலை நிறுத்தம்: அமைப்புசாராத் தொழிலாளர்கள் பங்கேற்பு
கோவை, ஜூலை 2- ஜூலை 9 இல் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத் தத்தில் அமைப்புசாராத் தொழிலா ளர்கள் பங்கேற்கவுள்ளதாக, கட்டு மானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் சங்கங்களின் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பாப்ப நாயக்கன்பாளையத்திலுள்ள ஏஐ டியூசி அலுவலகத்தில், கட்டுமா னம் மற்றும் அமைப்புசாராத் தொழி லாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட் டங்களை பெரு முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளது. 1996 கட்டடத் தொழிலாளர் மத்திய சட்டம் மற்றும் கட்டிடத் தொழிலா ளர் நலவாரிய வசூல் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களையும் கைவிட முடிவு செய்துள்ளது. இவற்றுக்கு எதிராகவும், புதிதாக கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடவும், 44 தொழிலாளர் சட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்திட வலியு றுத்தியும், விவசாய விளை பொருட் களுக்கு நியாயமான விலை வழங்க வலியுறுத்தியும் வரும் ஜூலை 9 ஆம் தேதியன்று அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளன. இப்போராட் டத்தில் கோவை மாவட்ட கட்டுமா னம் மற்றும் அமைப்பு சாராத் தொழி லாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்களும், தொழிலாளர்களும் ஜூலை 9 ஆம் தேதியன்று அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து விட்டு, மாவட்டத்தில் ஆறு மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டங்க ளில் பங்கேற்பது முடிவு செய்யப் பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட் டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, எல்பிஎப் வெ.கிருஷ்ணசாமி, ஏஐடி யூசி என்.செல்வராஜ், எச்எம்எஸ் ஜி. மனோகரன், தமிழக மக்கள் சேவா சங்கம் குரூஸ்மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.