tamilnadu

img

கட்டாய கடன் வசூல் தடைச் சட்டத்தை முழுமையாக அமலாக்குக! சிபிஎம் நாமக்கல் மாவட்ட சிறப்பு மாநாடு வலியுறுத்தல்

கட்டாய கடன் வசூல் தடைச் சட்டத்தை முழுமையாக அமலாக்குக! சிபிஎம் நாமக்கல் மாவட்ட சிறப்பு மாநாடு வலியுறுத்தல்

நாமக்கல், அக்.12- நாமக்கல் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது.  இம்மாநாட்டிற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசி னார். மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஆர். சந்திரமதி உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றினார். தீர்மானங்கள் இம்மாநாட்டில், காவிரி உபரிநீரை  திருமணிமுத்தாற்றில் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றி, மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நீரை நிரப்பி பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் தொழில்களை பாதுகாக்க வேண்டும்; தொழிலாளர்களை வறுமையில் இருந்தும், கடன் தொல்லையிலிருந்து மீட்க புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்; பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையின் கொடுமையால், கிட்னியை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு இழப்பீ ட்டுத் தொகை வழங்க வேண்டும். சாய,  சாக்கடை, சலவை ஆலை கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதை தடுத்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் - என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து, ராசிபுரம் பேருந்து நிலையத்தை தனிநபர்களின் சுய லாபத்திற்காக அணைபாளையத் திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை கைவிட்டு, தற்போதுள்ள பேருந்து நிலையத்திலேயே தொடர்ந்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்திவேலூரில் வெற்றிலை, வாழை ஆராய்ச்சி நிலை யம் அமைக்க வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு கொள்முதல் செய்ய எல்லையை விரிவாக்கம் செய்து கரும்பு விவசாயிகளை பாது காக்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கடன் வசூல் தடை சட்டம் – 2025யை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 50 ஆண்டுகளாக ஏரி நீர் வழி புறம்போக்கில் குடியிருந்து வரும் பட்டியலின, ஏழை மக்களுக்கு  மாற்று இடம் வழங்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை களை விரைவாக அரசு வழங்க வேண்டும். கொல்லிமலை வட்டாரத் தில் வசிக்கும் பழங்குடி மக்களின் அனு பவ நிலங்களை மறு அளவீடு செய்து, பழைய குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் - என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுச் சாமி, கி.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.கணேச பாண்டியன், எம்.ஆர்.முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், நாமக்கல் பிரதேசக்குழு செயலாளர் கு.சிவராஜ் நன்றி கூறினார்.