tamilnadu

img

சிஐடியு மாநில மாநாட்டை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

சிஐடியு மாநில மாநாட்டை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை, செப்.9- சிஐடியு கோவை மாவட்ட  ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் இலவச கண் பரி சோதனை முகாம் செவ்வா யன்று நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 16  ஆவது மாநில மாநாடு வருகிற  நவம்பர் 6 முதல் 9 வரை கோவையில்  நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன் னிட்டு கோவை மாவட்ட சிஐடியு ஆட்டோத்  தொழிலாளர் சங்கம் மற்றும் டிரினிட்டி சூப்பர்  ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது. முகாமை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் ஆர். வேலுசாமி, கோவை மாவட்ட ஆட்டோ  தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இரா. செல்வம், மாவட்டச் செயலாளர் எம்.கே.  முத்துக்குமார், பொருளாளர் எம்.மைக்கேல் சாமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசி னர்.  இந்த முகாமில் கண்புரை மற்றும் ஒளி விலகல், விழித்திரை மற்றும் கண் இரத்த நாள மையம், கார்னியா நீர் அழுத்த சிகிச்சை,  கண் நீர் அழுந்த சிகிச்சை, காண்டூரா லேசிக்  சிகிச்சை, நரமியியல் கண் மருத்துவம், கண்  கூடு மற்றும் கண் சீரமைப்பு, மழலை கண் மருத்துவம் மற்றும் மாறுகண் சிகிச்சை, பொது கண் மருத்துவம், குறைபார்வை நிலை  போன்ற கண் வியாதிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.